Skip to content Skip to footer

Nelikolu Publishing House books

The Nelikolu Charitable trust’s publications:

1. Badagumozhi pazhamozhigal (with Tamil and English meanings) ( pages, 185 ), 2003

2. Hethe deyvam ( Mother goddess of the Badagas ) (Tamil, pages 229), 2004

3. Goddess Hethe of the Nilgiri Badagas (English, pages 135 ), 2005

4. Badagu oru diravida mozhi (Tamil, pages 225 ), 2006

5. Badagar tirumanam (Tamil, pages 36 ), 2006

6. Marriage among the Nilgiri Badagas (English, pages 38), 2006

7. Badagar teertirupatti (Tamil , pages 220 ), 2007

8. Badagar aruvadai tirunaal ( Tamil , pages 224 ), 2008

9. Badaga -English Self Instructor ( English, pages 40 ), 2009

10. Badagar samaya nambikkai ( Tamil, pages 208 ), 2009

11. A Practical Key to the Badaga Language ( English, pages 154), 2011

12. Badagar panpaadu (Tamil, pages 230),2012

13. Badagar , Translation of Edgar Thurston’s entry on Badaga (Tamil, pages 168), 2016

1. படகுமொழிப் பழமொழிகள் (பக்கம் 185), 2003 விலை ரூ.60/-

2. ஹெத்தெ தெய்வம் (பக்கம் 229), 2004 விலை ரூ.100/-

3. Goddess Hethe of the Nilgiri Badagas (பக்கம் 135), 2005 Price Rs. 100/-

4.* படகு ஒரு திராவிட மொழி (பக்கம் 225), 2006 விலை ரூ.100/-

5. Marriage Among The Nilgiri Badagas (பக்கம் 38), 2006 Price Rs. 20/-

6. படகர் திருமணம் (பக்கம் 36), 2006 விலை ரூ.20/-

7. படகர் தேர்திருப்பத்தி (பக்கம் 220), 2007 விலை ரூ.100/-

8.* படகர் அறுவடைத்திருநாள் (பக்கம் 224), 2008 விலை ரூ.100/-

9. Badaga – English Self Instuctor (பக்கம் 40), 2009 Price Rs.30/-

10. படகர் சமய நம்பிக்கை (பக்கம் 208), 2009 விலை ரூ.100/-

11. A Practical Key To The Badaga Language (பக்கம் 154), 2011 Price Rs.80/-

12. படகர் பண்பாடு (பக்கம் 230), 2012    விலை ரூ.130/-

13. படகர் (மொழிபெயர்ப்பு நூல்) (பக்கம் 168), 2016   விலை ரூ.100/-

* தமிழ்நாடு அரசின் பரிசு பெற்ற நூல்கள்

 

நூல் சுருக்கம்

சென்னை படகர் நலச்சங்கம் நடத்திய “மந்தத மாத்து” என்னும் பருவ இதழுக்குக் கீயெ கவ்வட்டி இரா.கு ஆல்துரை பதிப்பாசிரியராக இருந்து 23 மூன்று இதழ்கள் வெளிக்கொண்டு வந்தார். அதேபோல் சென்னை படகர் நலச்சங்க வெள்ளிவிழா, ராவ்பகதூர் எச்.பி.ஆரிகவுடர் நூற்றாண்டு விழா ஆகியன நினைவாக வெளியிட்ட சிறப்பான மலருக்கும் இவர் பதிப்பாசிரியராக இருந்தார். இப் பணிகளில் இவரது எழுத்தாற்றலைக் கண்ட காலம் சென்ற குந்தெ பிக்கட்டி எச். நஞ்சுண்டன் அவர்கள் நம் சமுதாயம் தொடர்பாக எழுதும்படி இவரைக் கேட்டு வந்தார். அன்னாரது அவா நம் சமுதாயத்தின் வரலாறு உட்பட அனைத்தும் தெளிவில்லாமல் இருக்கின்றன. ஆகையால் நம்மைப் பற்றி தெளிவு ஏற்படுவதற்கு நம்மவர்கள் யாராவது எழுதுவதற்கு முன் வரவேண்டும் என்பதாகும். அன்னாரது வேண்டுகோளுக்கு இணங்கி 2003 ஆம் ஆண்டு படகுமொழிப் பழமொழிகள் என்ற புத்தகத்தைத் தொகுத்தளித்தார் ஆல்துரை அவர்கள். அப்பொழுது அப்புத்தகத்தை வெளியிடும் பதிப்பகத்திற்கு நெலிகோலு வெளியீட்டகம் எனப் பெயரிட்டார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. இரா.சிவக்குமார். அதைத் தொடர்ந்து நெலிகோலு அறக்கட்டளை உருவாக்க வேண்டும் என்னும் கருத்தை முன்மொழிந்து அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தார் அவர். கெக்கட்டி திரு. இர.தருமன், திரு. இரா.கு. ஆல்துரை, எடக்காடு திரு.இரா.சிவக்குமார், காலஞ்சென்ற பிக்கோளு திரு. பி.பாபூஜி ஆகியோரை உறுப்பினராகக் கொண்டு நெலிகோலு அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. நெலிகோலு அறக்கட்டளையின் வாயிலாக இதுவரை 13 புத்தகங்கள் வெளியாகியுள்ளன. அறக்கட்டளை இப்புத்தகங்கள் அனைத்திற்கும் வெளியீட்டு விழாக்கள் நடத்தியுள்ளது; இப்புத்தகங்களுள் சிலவற்றிற்குத் திறனாய்வுக்கூட்டமும் நடத்தியுள்ளது.
அப்புத்தகங்களின் சுருக்கம்:

பழமொழி

”படகுமொழிப் பழமொழிகள்” (2003) என்னும் தலைப்பில் அமைந்த நெலிகோலு அறக்கட்டளையின் முதல் புத்தகம் பல சிறப்புகளைக் கொண்டது. இதில் 1008 படகுப் பழமொழிகள் இடம்பெற்றுள்ளன. இவை அகரவரிசைப் படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் படகுப் பழமொழிகள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழி எழுத்துகளிலும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆங்கில எழுத்துகளுக்கு வேண்டிய இடங்களில் குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் படகுப் பழமொழிகளின் பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே படகுப் பழமொழிக்கு இணையாக இருக்கும் தமிழ், ஆங்கிலப் பழமொழிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பழமொழிகள் சமுதாயத்தில் இடம்பெற்றுள்ள இடத்தினை விளக்கும் வகையில் விளக்கமான ஒரு பின்னிணைப்புடன் இந்நூல் சிறப்புடன் விளங்குகிறது.

ஹெத்தெ  

சமுதாயத்தில் பத்துக்கும் மேற்பட்ட வரலாற்றுடன் கூடிய ஹெத்தெ தெய்வங்கள் இருப்பதை முதன்முதலாக எடுத்துக் காட்டும் சிறப்புடையது ”ஹெத்தெ தெய்வம்” (2004) என்னும் நூல். பல ஹெத்தெ தெய்வங்கள் இருந்தாலும் அவர்கள் எல்லோரையும் ஒன்றாக நினைத்து ஒருவர் போலக் கொண்டு வழிபடும் நிலை இருப்பதைக் காட்டும் சிறப்பையும் விளக்கியுள்ளது இந்நூல். ஹெத்தெ தெய்வங்களின் கால நிலைகளை நிரல்படுத்துவதற்கு உரிய தகவல்களுடன் இந்நூல் விளங்குகிறது. மேலும் ஹெத்தெ தெய்வங்களின் வரலாறுகளை விரிவாகக் காட்டும் வகையில் அமைந்துள்ளது இந்நூல். முன்னர் படகர் சமுதாயம் தாய்வழிச் சமுதாயமாக இருந்துள்ளது என்னும் நிலையை உய்த்துணர்வதற்குரிய தகவல்களுடன் இந்நூல் விளங்குகிறது. ஹெத்தெ தெய்வத்தைப்பற்றி ஆங்கிலத்தில் அமைந்தது “Goddess Hethe of the Nilgiri Badagas” (2005) என்னும் நூல்.

படகுமொழி

படகரின் அடையாளமாக விளங்கும் படகுமொழியின் இலக்கணத்தை எடுத்துக்காட்டுகளுடனும் மேற்கோள்களுடனும் விளக்கும் வகையில் அமைந்தது ”படகு ஒரு திராவிடமொழி” (2006) என்னும் நூல். இது இக்கால மொழியியல் அடிப்படையில் படகுமொழியின் இலக்கணத்தை விளக்கும் சிறப்பினைக் கொண்டது. உரிய இடங்களில் திராவிடக் குடும்பத்து இலக்கணம் கொடுக்கப்பட்டுள்ளதால் படகுமொழி தக்க வைத்துள்ள பழைமையான கூறுகளை எளிமையாக அறியும் வகையிலும் பின்னர் இம்மொழி தனக்கென்று உருவாக்கிக் கொண்டுள்ள தனித்தன்மைகளைக் காட்டும் வகையிலும் இந்நூல் அமைந்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக படகு ஒரு தனி மொழி என்பதைக் காட்டும் கருத்துகளுடன் இந்நூல் திகழ்கிறது.

திருமணம்

”படகர் திருமணம்” (2006) என்னும் நூல் படகர் திருமணச் சடங்குகளை விரிவாக விளக்குகிறது. படகரிடையே திருமணத்திற்கென்று அமைந்த குலப் பிரிவுகள் இங்குக் கொடுக்கப்பட்டுள்ளன. பின்னிணைப்பில் திருமணம் தொடர்பான சொற்கள் இடம்பெற்றுள்ளன. இந்நூலின் ஆங்கில வடிவம் “Marriage Among The Nilgiri Badagas” (2006) என்னும் தலைப்பில் அமைந்துள்ளது.

இறப்புச் சடங்கு

”படகர் தேர் தேர்திருப்பத்தி” (2007) என்னும் தலைப்பில் அமைந்த நூல் இம்மக்கள் இறப்பைப் பற்றி கொண்டிருக்கும் கருத்து அதற்கேற்ப அமைந்திருக்கும் இறப்புச் சடங்கு ஆகியவற்றை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. இறப்புச் சடங்குகளுக்கு அடிப்படையாய் இருக்கும் இம்மக்களின் வாழ்வு நிலைகளும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. இறப்புச் சடங்குகளில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ள ’கருஹரசுவது’ பொருளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னர் விரிவாகக் கடைப்பிடித்து வந்த இறப்புச் சடங்குகள் கால வோட்டத்தில் சுருக்கம் எய்திவருவதும் இங்குக் காட்டப்பட்டுள்ளது.

தெவ்வ

‘படகர் அறுவடைத் திருநாள்” (2008) என்னும் தலைப்பில் அமைந்த நூல் நம் குலமுதல்வனான தெவ்வவின் சிறப்பினைக் காட்டும் வகையில் அமைந்துள்ளது. படகர் தாம் விளைவிக்கும் விளைச்சலை முதலில் படைக்கும் தெய்வமாக விளங்குவதால் தெவ்வ ஹப்பாவினை அறுவடைத் திருநாள் என்றும் வழங்கலாம் என்னும் குறிப்பைக் கொண்டதுதான் இந்நூல் தலைப்பு. தெவ்வவுக்குப் படைப்பதற்கு முன் புது விளைச்சலை இம்மக்கள் உண்பதில்லை. புதுவிளைச்சலைப் படைக்கும் இடமான அக்க பக்க, பநகுடி போன்றனவற்றின் வரலாற்றுப் பின்னணி விளக்கப்பட்டுள்ளது. படகர்க்கு முன்னோர் வீடே கோயில் என்னும் உண்மையைக் காட்டும் வகையில் ”தெவ்வ மநெ” என்று குறிப்பிடும் சிறப்பு போன்றனவும் இங்கு விளக்கப்படுள்ளன.

சமயம்

”படகர் சமய நம்பிக்கை” (2009) என்னும் தலைப்பில் அமைந்த நூல் முன்னோர் வழிபாடு இம்மக்களிடம் வேரூன்றி இருப்பதைக் காட்டுகிறது. இது இம்மக்கள் மறுபிறவிக் கொள்கையில் நம்பிக்கை இல்லாமலிருக்கும் தன்மை போன்றவற்றை விளக்கும் வகையிலும் அமைந்துள்ளது. எளிமையான பூசையுடன் மனவமைதி தரத்தக்க வகையில் இம்மக்கள் சமய நம்பிக்கை அமைந்திருப்பது இங்கு விளக்கப்பட்டுள்ளது. படகர்க்கு அமைந்த வழிபாட்டிடங்கள் சில. வழிபாட்டுப் பொருள்களும் சிலவாகத்தான் உள்ளன. இவற்றை எல்லாம் விளக்கும் வகையில் அமைந்துள்ளது இந்நூலின் சிறப்பாகும். அண்மைக் காலத்தில் பிறவிடங்களிலிருந்து வந்த சமய நம்பிக்கைகள் இம்மக்களுடன் இயையாமல் இருப்பதை காட்டும் வகையில் இந்நூல் விளக்கங்கள் அமைந்துள்ளன.

மொழிக்கற்றல்

“Badaga – English Self Instructor” (2009) என்னும் நூல் படகுமொழி கற்பதற்குரிய நூல். இது ஒன்பது பாடங்களைக் கொண்ட நூல். படகு எழுத்துகளின் ஒலிப்பு முறைய்யில் தொடங்கும் இப்புத்தகம் சொந்த, லெக்க, மநெ என்பனபோன்று பல தலைப்புகளில் சொல், சொற்றொடர் முதலியவற்றுடன் படகு மொழியை விளக்குகிறது.
“A practical key to The Badaga Language” (2011) என்னும் நூலும் படகுமொழியைக் கற்பதற்குரிய நூல். படகுமொழியின் பெயர், மாற்றுப்பெயர், வினை, இடை என்பன போன்று வரும் இலக்கணங்களை எளிய வகையில் மேற்கோள்களுடன் விளக்கும் நூல் இது. இங்குப் படகு சொற்கள் அல்லது சொற்றொடர்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழி எழுத்துகளிலும் அமைந்துள்ளன. பொருள் ஆங்கிலத்தில் அமைந்துள்ளது. படகு இலக்கணம் படிப்படியாக இங்கு விளக்கப்பட்டுள்ளது.

பண்பாடு

படகர் பண்பாடு முகாமையாக ஒரு பழங்குடியினர் பண்பாடாக விளங்குவதை எடுத்துக் காட்டும் நூல் “படகர் பண்பாடு” (2012). படகர் வாழ்க்கை முறை, நம்பிக்கை, மரபு ஆகியன அடிப்படையில் அமைந்த பண்பாட்டுக் கூறுகளை இந்நூல் விளக்குகிறது. படகரிடையே காணப்படும் சிறப்பான விருந்தோம்பல் பண்பு விளக்கப்பட்டுள்ளது. படகரிடையே அமைந்த குலங்கள் அடையாளப் படுத்தப்பட்டுள்ளன. படகர் பயன்பாட்டுப் பொருள்கள், ஆடை அணிகலன், வீடமைப்பு, உணவுப்பழக்கம் போன்றன அனைத்தையும் விளக்கும் நூல் இது. சற்றொப்ப படகர் பண்பாட்டுத் தொடர்பான செய்திகள் அனைத்தையும் விளக்கும் நூல் இது. இது படகர் காலக்கணக்கு, பெயர், உறவுமுறைப்பெயர் போன்றனபற்றிய பின்னிணைப்பு களையும் கொண்டுள்ளது.

மொழிபெயர்ப்பு

எட்கார் தர்சுடன் (Edgar Thurston) என்பவர் ‘Castes and Tribes of Southern India” என்னும் தலைப்பில் அமைந்த நூலில் தென்னாட்டுக் குலங்கள் குடிகள் ஆகியவற்றைப்பற்றி விரிவாக எழுதியுள்ளார். அந்நூலில் படகரைப் பற்றி 64 பக்கச் செய்திகள் உள்ளன. ஆங்கிலத்தில் அமைந்த அச்செய்திகளின் தமிழ் மொழிபெயர்ப்பு “படகர்” (2016) என்னும் தலைப்பில் அமைந்த நூல். எட்கார் தர்சுடனின் இந்நூல் 1909 ஆம் ஆண்டு வெளியானது. இது படகரைப்பற்றி ஓரளவு முழுமையான செய்திகளைக் கொண்டது. ஆகையால் அதன் மொழிபெயர்ப்பு படகரைப் பற்றி அறிய பெருமளவில் துணை புரியும் என்னும் நோக்கத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூலில் படகரைப் பற்றிய செய்திகள் சில தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைச் சுட்டிக்காட்டும் வகையில் அவ்விடங்களுக்கு அடிக்குறிப்புக் கொடுத்து உண்மைச் செய்தி விளக்கப்பட்டுள்ளது.