Skip to content Skip to footer

Badaga Dictionary

நெலிகோலுவின் படகு – தமிழ் – ஆங்கிலம் அகராதி உருவாக்கத்தின் பின்புலம்: பல்லாண்டு உழைப்பு! பலபேர் ஈடுபாடு!! பரந்த நோக்கம்!!!

சிறப்புத்தன்மை:

1. படகுச்சொற்களை எளிமையாகவும் தெளிவாகவும் அடையாளம் காண ஒலியனியல் (phonology) அடிப்படையில் தமிழ், ஆங்கிலம் எழுத்துகளைக் கொண்டு படகுச்சொற்கள் பதிவு; உரியவகையில் அகரவரிசைப் படுத்தம் (alphabetization).

2. பொருள் தெளிவுக்கு படகுச் சொற்களுக்கு இனமான தமிழ்ச்சொல் அல்லது தமிழில் பொருள், ஆங்கிலப்பொருள் ஆகியனவற்றுடன் எடுத்துக்காட்டு (example), மறுவழக்கு (synonym), வழக்கு (usage) ஆகிய பதிவுகள்.

3. படகு மொழியின் இலக்கணக் கூறுகள் உரிய இடங்களில் ஆங்காங்கே விளக்கப்பட்டுள்ளன.

4. முந்நூறு இடங்களில் படவிளக்கம்

5. 920 பக்க அளவில் பதினேழாயிரம் உருப்படிகளையும் ஐயாயிரம் துணை உருப்படிகளையும் கொண்ட ஒரு விரிவான அகராதி

6. படகுமொழி இலக்கணம் முதல் நீலமலை மருத்துவத் தாவரங்கள் வரை முப்பத்தி மூன்று தலைப்புகளில் 160 பக்கம் விரிவான பின்னிணைப்பு

பயன்பாடு:

1. மாணவர்களுக்கு, குறிப்பாக படகினைத் தாய்மொழியாகக் கொண்டவர்க்குத் தாய்மொழி, தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றில் தேர்ச்சி,

2. பண்பாட்டினைக் காக்க விரும்புவோர்க்கு வழிகாட்டிக் கையேடு,

3. ஆய்வறிஞர்க்குப் பார்வைப் புத்தகம்,

4. தாய்மொழியைப் பற்றிய பெருமிதம் உருவாக்கல்,

5. படகுமொழியில் கவிதை, கட்டுரை போன்றன உருவாக்க ஊக்கம்,

6. படகுமொழியைப் பற்றி அறிய விரும்பும் பிறமொழியாளர்க்கு வழிகாட்டி,

7. படகுமொழி அழிவினைத்தடுக்க உதவும் பெரும் கேடயம்.